Close

வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயிலும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026

தமிழ்நாடு அரசு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயிலும் 10 சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 இலட்சம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

தகுதியான மாணவர்கள் QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.10.2026-க்குள் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர், சென்னை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

தகுதியான மாணவர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 230KB)