2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2026.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
2026–2027-ஆம் நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ= என்ற இணைப்பை (Link) கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.11.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 386KB)