Close

2026 கேரள தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் எல்லைப் பகுதிகளில் மதுபான கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026

கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135(C)-இன் கீழ், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்டஎல்லைப் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள, அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மேலும் FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற வளாகங்களை 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் 09.04.2026 (வாக்குப்பதிவு நாள்) நள்ளிரவு 12.00 மணி வரையிலும் சுற்றவிலுள்ள அனைத்து மதுபான உரிமத்தளங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  (PDF 282KB)