2026–2027-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – விண்ணப்பிக்க கடைசி நாள் 18.01.2027.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று, சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசால் ஒளவையார் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதுடன் ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறப்பான சேவை புரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். பெண்களின் நலன் மற்றும் முன்னேற்றம் சார்ந்த சமூக சேவைகள் மட்டுமே விருதிற்குப் பரிசீலிக்கப்படும்.
2026–2027-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெறத் தகுதியுள்ள பெண்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்களது விண்ணப்பங்களை 18.01.2027-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.