2026–2027 ஆம் ஆண்டில் 400 ஏக்கர் பரப்பளவில் பல்லாண்டு தீவனப்பயிர் சாகுபடி – பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026–2027 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் பல்லாண்டு தீவனப்பயிர் சாகுபடியை ஊக்குவித்து பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன வசதியுடன் குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் நிலம் கொண்ட சிறு, குறு மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குத் தீவனப் பயிர்களைப் பராமரிக்க உறுதியளிக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான விவசாயிகள், தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையத்தை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.