2027ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணை அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2027-ஐ தகுதி பெறும் நாளாகக் கொண்டு, 2027ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 12.11.2026
-
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கும் காலம்: 12.11.2026 முதல் 11.12.2026 வரை
-
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான தீர்வு: 28.12.2026க்குள்
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 04.01.2027
தகுதியுள்ள பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்களை உரிய படிவங்கள் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலகங்கள், சிறப்பு முகாம்கள் அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINET கைப்பேசி செயலி வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.
தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து, தேவையான திருத்தங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.