Close

படங்கள் ஏதும்  இல்லை

புதிய நகர்ப்புற நிலப் பதிவு இணையதளம் துவக்கம் – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2022

நகர் ஊரமைப்புத்துறையில் பொது மக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் இணையதள www.onlineppa.tn.gov.in துவக்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் – பத்திரிகை செய்தி (PDF 370KB)

மேலும் பல
WORLD FIRST AID DAY NEWS

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு முதலுதவி விழிப்புணர்வுக்காக உலக சாதனை படைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு 09-09-2022 சனிக்கிழமையன்று கோவையில் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஆபத்தான சூழ்நிலைகளில் அடிப்படை உயிர் ஆதரவு மற்றும் மீட்பு நிலைகளை நிரூபித்து உலக சாதனை படைத்துள்ளனர். கோவையில் இருந்து 49 வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து 5,386 மாணவர்கள் பங்கேற்று, வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சாதனை முயற்சியில் தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தெரிவித்துள்ளார் (PDF 45.6KB)

மேலும் பல
MONITORING OFFICER MEETING INSPECTION NEWS DT

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்தில் 09,09.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இஆப, அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தலைமையில் நடைபெற்றது. (PDF 4.8.4KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 11-09-2022

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 11-09-2022 (PDF 601KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் 11-09-2022 மாவட்ட ஆட்சித்தலைவர் – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் 11-09-2022 மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. – பத்திரிகை செய்தி (PDF 44.1KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 09-09-2022 மற்றும் 18-09-2022 தேதிகளில் குடற்புழு நீக்கசிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது – பத்திரிகை செய்தி (PDF 33.8KB)

மேலும் பல
HONBLE CHIEF JUDGE - VVIP GUEST HOUSE OPENING NEWS

ரேஸ்கோர்ஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி கட்டடத்தை 08.09.2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.முனிஸ்வர்நாத் பண்டாரி அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்த நிகழ்வில் மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல்தியாகராஜன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்களும் கலந்துகொண்டார். (PDF 25KB)

மேலும் பல
POOMPUGAR KOLU DOLL SALE STARTING NEW DT

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், டவுன்ஹால் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 07.09.2022 அன்று கொலுபொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 40KB)

மேலும் பல
LAW AND ORDER MEETING PHOTO

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 07.09.2022 அன்று சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பல
COLLECTOR - STRENGTHENING PHC

கோயம்புத்தூர் மாவட்டம் 5 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம் 5 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.1.5கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டதை 06.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் பல