மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.12.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/12/202212.12.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 214KB)
மேலும் பலஆனைகட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2022கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைகட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.
மேலும் பலஆனைகட்டி சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் “போலாம் ரைட்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2022கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் “போலாம் ரைட்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்., இ.ஆ.ப, அவர்கள் இன்று 10.12.2022 அன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சலீம் அலி பறவைகள் பறவைகள் ஆராய்ச்சி நிலைய முதுநிலை அறிவியலாளர் டாக்டர்.பிரமோத் மற்றும் அறிவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். (PDF 39KB)
மேலும் பலகோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2022கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 09.12.2022 அன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் சார்பில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார்கள். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார்,மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மருத்துவத்துறை […]
மேலும் பலசுல்தான்பேட்டை வட்டாரத்தில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2022கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சுல்தான்பேட்டை வட்டாரத்தில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் DDUGKY, RSETI, TNSDC திட்டங்களின்கீழ் நடைபெறும் இலவச திறன் பயிற்சியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்கள் (ஆண், பெண், இருபாலரும்) தகுதியான இலவச பயிற்சியினை தேர்வு செய்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் […]
மேலும் பலவாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 08.12.2022 அன்று வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். (PDF 42KB)
மேலும் பலநிலம் தொடர்பாக பல்வேறு தேவைகளுக்கு இணையவழியில்பெற தமிழ்நாடு அரசால் புதிய சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2022தமிழ்நாட்டில் நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் பொதுமக்களுக்கு நிலம் தொடர்பாக பல்வேறு தேவைகளுக்கு அரசு அலுவலங்களுக்கு நேரில் செல்லாமலேயே இருந்த இடத்தில் நில ஆவணங்கள் பெறவும், இணையவழியில் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெறவும் தற்போது தமிழ்நாடு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய சேவைகளும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. (PDF 347KB)
மேலும் பலவித்யா விகாஷினி வாய்ப்புகள் பள்ளி ஆசிரியக்கு தமிழ்நாடு அரசின் விருது -மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்து
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2022தமிழ்நாடு அரசின் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கோயம்புத்தூர் வித்யா விகாஷினி வாய்ப்புகள் பள்ளி ஆசிரியர் பாவை ஜோதி அவர்கள் தமிழ்நாடு அரசின் விருது பெற்றதையடுத்தது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 08.12.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் திரு.வசந்தராம்குமார் உள்ளார்.
மேலும் பலசட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 08.12.2022 அன்று சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.ஜி.சந்திஸ் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலபடைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடிநாள் நிதியினை வழங்கி தொடங்கிவைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 07/12/2022படைவீரர் கொடிநாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 07.12.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடிநாள் நிதியினை வழங்கி தொடங்கிவைத்து, கடந்த ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதிவசூல் பணியினை மேற்கொண்ட மாவட்ட அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சி.ரூபா சுப்புலட்சுமி, இந்திய கப்பல்படை ஐ.என்.எஸ். அக்ரனி கேப்டன் திரு.ஆகாஷ்ஜோசப், இந்திய தரைப்படை (110 பிரதேச ராணுவப்படையின்) […]
மேலும் பல