சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 15.11.2022 அன்று சாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர் திரு.அசோக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் திரு.மதிவாணன் , உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப, பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா,வட்டார போக்குவரத்து அலுவலர்கள், […]
மேலும் பலகீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் என் கனவு பள்ளி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2022கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கார்ப்ரேட் நிறுவனம் இணைந்து உருவாக்கிய என் கனவு பள்ளி திட்டத்தினை 14.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் BGSW பிரிவு தலைவர் வி.எஸ்.சைஜு, முதன்மை கல்வி அலுவலர் பூபதி , கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.(PDF 45KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.11.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/11/202214.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.(PDF 34KB)
மேலும் பலவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2022கோயம்புத்தூர், நேதாஜி ரோடு, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் 13.11.2022 அன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் கல்பனா அலமேலு,துணை வட்டாட்சியர் (தேர்தல்) மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2022மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 27.11.2022 அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் […]
மேலும் பலதுணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 11.11.2022 அன்று துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக ஜவுளித்துறையை சார்ந்த தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் முனைவர்.எம்.வள்ளலார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப.,, சைமா பொதுச்செயலாளர் முனைவர்.கே.செல்வராஐீ, துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் ச.செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய […]
மேலும் பலமதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/11/2022கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சி பகுதிகளில் 09.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்கிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி கலந்து கொண்டனர். (PDF 42KB)
மேலும் பலமதுக்கரை தாலுக்கா திருமலையாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 09/11/2022மதுக்கரை தாலுக்கா, திருமலையாம்பாளையம் கிராமத்தில் 09.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., திருமலையாம்பாளையம் பேரூராட்சித் தலைவர் திருமதி.கவிதா உதயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தி.மு.க.ஆனந்தி (எட்டிமடை), திரு.கணேசன் (அரிசிபாளையம்), திருமதி.கலாமணி (வழுக்குப்பாறை), திருமதி.கோமதி. (மாவுத்தம்பதி), திருமதி.சசிபிரியா (நாச்சிபாளையம்), துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் திரு.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் […]
மேலும் பலமதுக்கரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2022கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலத்துறை ஊராட்சி, மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் 08.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் , ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் திருமலைசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.(PDF 37KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.11.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 07/11/202207.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.PDF 37KB)
மேலும் பல