ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் 26.10.2022 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 35KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(21.10.2022) முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி இயக்குநர்(முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் சி.ரூபாசுப்புலெட்சுமி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 35KB)
மேலும் பலஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் (20.10.2022) ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2022கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி, சுகாதார ஆய்வாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், மாவட்ட தொழிலக பாதுகாப்பு அலுவலகம், ஐடிஐ பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகிய இடங்களில் (18.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) பூமா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வடக்கு மண்டல கோட்டப்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.(PDF 40KB)
மேலும் பலதமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலஉலக விபத்து காயம் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022உலக விபத்து காயம் தினத்தினை (World Trauma Day) முன்னிட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(17.10.2022) விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.நிர்மலா மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.10.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/10/202217.10.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.(PDF 45KB)
மேலும் பலகிராம உதவியாளர் பதவிக்கு இணையதள விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2022கிராம உதவியாளர் பதவிக்கு இணையதள விண்ணப்பம்-செய்தி வெளியீடு
மேலும் பலதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்(14.10.2022) உழவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங்க் தோமர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையர் திரு.சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்., இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன்(பொள்ளாச்சி), திரு.அம்மன் கே.அர்ஜுனன்(கோவை வடக்கு), திருமதி.வானதி சீனிவாசன்(கோவை தெற்கு), திரு. டி.கே.அமுல்கந்தசாமி (வால்பாறை) […]
மேலும் பலதோட்டக்கலை பயிர்களுக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வீர்
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வீர் – தோட்டக்கலைத்துறை பத்திரிக்கை செய்தி(PDF 20KB)
மேலும் பல