நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், டவுன்ஹால் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 07.09.2022 அன்று கொலுபொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 40KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 07.09.2022 அன்று சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் 5 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2022கோயம்புத்தூர் மாவட்டம் 5 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.1.5கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டதை 06.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் பலதேசிய அளவிலான 11வது வேளாண்மைக் கணக்கெடுப்பு 2021-22 – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2022தேசிய அளவிலான 11வது வேளாண்மைக் கணக்கெடுப்பு 2021-22 நடைபெறவுள்ளது. விவசாயிகள் முழுஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். – பத்திரிகை செய்தி (PDF 26KB)
மேலும் பலமுதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குளுக்கோமீட்டர் மற்றும் குளுக்கோ ட்ரிப்ஸ் ஆகிய உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள முதல் வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு குளுக்கோமீட்டர் மற்றும் குளுக்கோ ட்ரிப்ஸ் ஆகிய உபகரணங்களை இதயங்கள் அறக்கட்டளை சார்பில் 06.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, அவர்கள் வழங்கினார். (PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் 06.09.2022 அன்று தொடங்கி வைத்தார். (PDF 30KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் முதலுதவி சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பான விளம்பர ஒட்டுவில்லையினை வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாணவ மாணவியர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மாபெறும் முதலுதவி சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பான விளம்பர ஒட்டுவில்லையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
மேலும் பலஆசிரியர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 05.09.2022 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். (PDF 33KB)
மேலும் பலபுதுமைப் பெண் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022புதுமைப் பெண் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் 05.09.2022 அன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் 620 மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார். அந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்களும் கலந்துகொண்டார். (PDF 48KB)
மேலும் பலவ.உ.சிதம்பரனார் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022வ.உசிதம்பரனார் அவர்களின் 151வது பிறந்த தினமான இன்று 05.09.2022 கோவை மத்திய சிறைச்சாலை முகப்பில் உள்ள வ.உசிதம்பரனார் இழுத்த செக்குக்கு அருகில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்களும் கலந்துகொண்டார் (PDF 34.1KB)
மேலும் பல