Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

வ.உ.சிதம்பரனார் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022

வ.உசிதம்பரனார் அவர்களின் 151வது பிறந்த தினமான இன்று 05.09.2022 கோவை மத்திய சிறைச்சாலை முகப்பில் உள்ள வ.உசிதம்பரனார் இழுத்த செக்குக்கு அருகில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்களும் கலந்துகொண்டார் (PDF 34.1KB)

மேலும் பல

தீபாவளி பண்டிகை 2022 தற்காலிக பட்டாசு கடை உரிமம் இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022

தீபாவளி பண்டிகை 2022 தற்காலிக பட்டாசு உரிமம் ஆன்லைன் விண்ணப்பம் 01.09.2022 முதல் 30.09.2022 வரை சமர்ப்பிப்பு – பத்திரிகை செய்தி (PDF 72.8 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.09.2022 அன்று நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022

05.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 37.1KB)

மேலும் பல

தென்செங்கம்பாளையம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022

தென்செங்கம்பாளையம் கிராமத்தில் எதிர் வரும் 14.09.2022 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது (PDF 804KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-II) தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2022

கோயம்புத்தூர், ஜிடி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 04.09.2022 அன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-II) தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

விவசாய உள்கட்டமைப்பு நிதிக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கூட்ட அரங்கில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்கள் தலைமையில் 03.09.2022 அன்று நடைபெற்றது. (PDF 50KB)

மேலும் பல

35வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 04-09-2022

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2022

35வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 04-09-2022 (PDF 608KB)

மேலும் பல

மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Union Public Services Commission) தேர்வுகள் 2022 – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2022

மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Union Public Services Commission) வருகின்ற 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை (மு.ப.நண்பகல்&பி.ப.) அன்று ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-II)-2022 கோயம்புத்தூர் மாவட்டத்தில் 05 தேர்வுமையங்களில் நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி (PDF 49KB)

மேலும் பல

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாய பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2022

02.09.2022 அன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாய பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முனைவர் எஸ்.நடராஜன் இஆப., அவர்கள் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது (PDF 53KB)

மேலும் பல

ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 02.09.2022 ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்

மேலும் பல