மாவட்ட ஆட்சித்தலைவர் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை 12.08.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உணவு திருவிழா நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடத்திய உகந்த உணவு திருவிழா நிகழ்ச்சியினை 12.08.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 55KB)
மேலும் பலகுழாய் வெடிப்பு அல்லது எரிவாயு கசிவு சம்பவம் எதுவும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/08/202211.08.2022 அன்று தண்ணீர்பந்தல் சாலையில் நடந்த இந்தச் சம்பவம், குழாயில் இருந்து மேம்படுத்தப்பட்ட சேறு மற்றும் அசுத்தங்களை அகற்றுவதன் ஒரு பகுதியாகும். மேலும் காற்று மற்றும் நீர் மட்டுமே வெளியிடப்பட்டது, எனவே பீதி அடைய ஒன்றுமில்லை. IOC இன் முதன்மையான முன்னுரிமை பாதுகாப்பு. இது எஃகு குழாய்களின் பொறியியல் மற்றும் சோதனையின் ஒரு பகுதியாகும். மேலும் குழாய் வெடிப்பு அல்லது எரிவாயு கசிவு சம்பவம் எதுவும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. (PDF 93KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை இந்துஸ்தான் கல்லூரியில் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவியர்களும் எடுத்துக்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 11.08.2022 சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, போதை ப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை மாணவர்களுடன் எடுத்து கொண்டதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, அவர்கள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்து மாணவ மாணவியர்களும் எடுத்துக்கொண்டனர். (PDF 56KB)
மேலும் பல75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/202275-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இவ்விழாவினை கொண்டாடும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி. பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் 13.08.2022 முதல் 15.08.2022 வரை தேசியக்கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (PDF 107KB)
மேலும் பல75வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட தேசிய கொடியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 08.08.2022 அன்று தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 75வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட தேசிய கொடியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கவிதா மகளிர் திட்ட இயக்குனர் திருமதி.சந்திரா ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலஸ்டார் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் நேரில் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2022கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டார் சிறப்பு பள்ளியில் 08.08.2022 அன்று மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர் இ.கா.ப., ஆகியோர் நேரில் கலந்துரையாடினார்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 08.08.2022 நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 08.08.2022 நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் பலநலந்தானா கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுசுகாதாரத்தில் வரலாறு குறித்து உரையாற்றினார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2022கோயம்புத்தூர் கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 07.08.2022 அன்று நடைபெற்ற நலந்தானா கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பொதுசுகாதாரத்தில் வரலாறு குறித்து உரையாற்றினார்.
மேலும் பலலூம் வேர்ல்டு விற்பனையகத்தில் கைத்தறிக் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/08/20228-ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், சாயிபாபா காலனி லூம் வேர்ல்டு விற்பனையகத்தில் 07.08.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். (PDF 25KB)
மேலும் பல