அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் பரிசு கோப்பைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2022கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 06.08.2022 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவர் விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கோப்பைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கினார். (PDF 397KB)
மேலும் பல33வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 07-08-2022
வெளியிடப்பட்ட நாள்: 06/08/202233வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 07-08-2022. (PDF 628KB)
மேலும் பலபோதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.08.2022 அன்று போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44KB)
மேலும் பலமாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2022 அன்று மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆனைமலையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 04.08.2022 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் சார்பில் ரூ.3,05கோடி மதிப்பீட்டில் மேலாண்மைத்துறையில் சார்பில் ஆனைமலையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை காணொலிக் காட்சி(Off Line) வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF 46KB)
மேலும் பலஇளைஞர் திறன் திருவிழா பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் நடைபெற உள்ளது – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா 06.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 504KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர்
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2022ஈரோடு மாவட்டத்தில் 03.08.2022 அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆப., மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.
மேலும் பலவருகைபுரிந்த கோஸ்டாரிக்கா குடியரசு நாட்டின் தூதுவர் அவர்களை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரவேற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/08/2022கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 02.08.2022 அன்று வருகைபுரிந்த கோஸ்டாரிக்கா குடியரசு நாட்டின் தூதுவர் திரு.கிளாடியோ அன்சாரேனா (Mr.Claudio Ansorena Ph.D, Ambassador, Embassy of The Republic of Costa Rica) அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.08.2022 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/08/202201.08.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 221KB)
மேலும் பலஅனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.08.2022 அன்று வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆட்சித்தலைவர் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 285KB)
மேலும் பல