கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் நிதி உதவி வழங்குதல் – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2022கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தழிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.- மேலும் விவரங்களுக்கு – பத்திரிக்கைச் செய்தி (PDF 294KB)
மேலும் பலஉலகதாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2022உலகதாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு, 01.08.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.
மேலும் பலஅனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2022கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31.07.2022 அன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 84KB)
மேலும் பலகோயம்புத்தூர் புத்தக திருவிழாவின் நிறைவு நாள் மாண்புமிகு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2022கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் 31.07.2022 அன்று கோயம்புத்தூர் புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 382KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 29.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆய, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 223KB)
மேலும் பலகூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2022OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதன் பொருட்டு நேர்காணல் நடைபெறுவதாகவும், பணியின் பொருட்டு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்து OLX செயலி மூலம் விளப்பரப்படுத்தி 8220433363 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளத் தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. -பத்திரிக்கைச் செய்தி (PDF 42KB)
மேலும் பலஇந்திய இராணுவத்திற்காக ஆட் சேர்ப்பு முகாம் 20.09.2022 முதல் 01.10.2022 வரைT.E.A. பொதுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2022கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் சுலந்து கொள்ளும் வகையில் இந்திய இராணுவத்திற்காக ஆட் சேர்ப்பு முகாம் 20.09.2022 முதல் 01.10.2022 வரை T.E.A. பொதுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியான வயது வரம்பு 17 1/2முதல் 21 வரை ஆகும். – பத்திரிக்கைச் செய்தி (PDF 111KB)
மேலும் பலவேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கான வேளாண் மேற்கு மண்டலக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2022கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 28.07.2022 அன்று வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கான வேளாண் மேற்கு மண்டலக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்கள் முன்னிலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை இஆப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 406KB)
மேலும் பலஅனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கொடிகம்பம், விளம்பர போஸ்டர்ஸ்களை அகற்றியிடுமாறு வேண்டுகோள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்ற வகையில் உள்ள கொடிகம்பம், விளம்பர போஸ்டர்ஸ்களை பத்துநாட்களுக்குள் அகற்றிடுவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 31KB)
மேலும் பலகோயம்புத்தூர் புத்தக திருவிழா திருக்குறள் பெருந்திரள் வாசிப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2022கோயம்புத்தூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு, 400 பள்ளிகளைச் சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஒரே இடத்தில் முக்கியமான 20 திருக்குறள்களை வாசிக்கும் நிகழ்ச்சியில் இன்று 28.07.2022 மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் கலந்து கொண்டார். (PDF 231KB)
மேலும் பல