6வது கோயம்புத்தூர் புத்தக திருவிழாவினை மாண்புமிகு அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்து, இளம்படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2022கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் 22.07.2022 அன்று மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 6வது ஆண்டாக நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தக திருவிழாவை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி,கல்பனா ஆனந்த்குமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப். இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், கொடிசியா தலைவர் வி.திருஞானம், […]
மேலும் பல44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விழிப்புணர்வு நடைஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2022கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் 22.07.2022 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடை ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 219KB)
மேலும் பலதமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 21/07/202221.07.2022 அன்று தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12186 கோடி மதிப்பில் 1441 வீடுகள் கொண்ட 7 அடுக்குமாடிகுடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, ரூ.494.29 கோடி மதிப்பில் 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடிகுடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் இஆபட, அவர்கள் தகவல். (PDF 154KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2022மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 22KB)
மேலும் பலஅன்னூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு கைகள் மற்றும் இரு கால்களை இழந்த வாலிபாருக்கு நவீன எடைகுறைந்த கைகள் மற்றும் கால்கள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2022கோயம்புத்துர் மாவட்டம், அன்னூர் வட்டம், குமரன் குன்று வேப்பம்பள்ளம் பகுதியினை சேர்ந்த 22 வயதான வாலிபர் சுபாஷ். இவர் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட மின்சார விபத்தால் 05.02.2022 அன்று இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும் இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார்.இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்களிடம் உதவி வேண்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார். அதனடிப்படையில் ரூ.250 இலட்சம் மதிப்பில் நவீன எடைகுறைந்த கைகள் மற்றும் கால்கள் முதலமைச்சர் […]
மேலும் பல44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2022சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளிப்பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்கள் இன்று 21.07.2022 கொடியசைத்து துவக்கி வைத்தார். ( PDF 152KB)
மேலும் பல44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செஸ் போட்டி துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 20/07/202244வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 19.07.2022அன்று அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டியை துவக்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் அவர்களுடன் செஸ் விளையாடினார்.
மேலும் பலகோயம்புத்தூர் மாநகராட்சி நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2022கோயம்புத்தூர் மாநகராட்சி பூமார்க்கெட், தெப்பக்குளம் வீதி, ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள நியாய விலைக் கடைகளில் 20.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2022அன்னூர் அரசு மருத்துவமனையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் 19.07.2022அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கோயம்புத்தூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி 2022 ஆய்வுக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றை நடத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2022கோயம்புத்தூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி 2022 ஆய்வுக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் 19.07.2022 அன்று நடத்தினார்கள் (PDF 57KB)
மேலும் பல