உலக மருத்துவர் தின விருது 2022க்கான சிறப்பு பணி சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2022உலக மருத்துவர் தின (01.07.2022) விருது பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்புற செயல்படுத்திய மருத்துவர்களுக்கு சிறப்பு பணி சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் பலபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய சோமையம்பாளையம் ஊராட்சியில் பேருந்து நிலைய பணிகள், தடுப்பு அணை மற்றும் குட்டை அமைக்கும் பணி ஆகிய திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 45KB)
மேலும் பலமுதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2022தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 313KB)
மேலும் பலதமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு’ எனும் தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு’ எனும் தலைப்பில் +2 வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 29.06.2022 அன்று நடைபெற்றது. (PDF 62KB)
மேலும் பலஇளைஞர் திறன் திருவிழா பெரியநாயக்கன்பாளையம் வட்டார அளவில் 02.07.2022 அன்று நடைபெற உள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா AVB மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 02.07.2022 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் இளைஞர்கள் தகுதியான இலவச திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள் -பத்திரிகைச் செய்தி
மேலும் பலகோவை அரசுப் பொருட்காட்சியினை காணவரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் வகையில் கோவை அரசுப் பொருட்காட்சியினை காணவரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்று பரவலை தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 220KB)
மேலும் பலவேளாண் விளை பொருட்களின் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் விளை பொருட்களின் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 238KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022கோயம்புத்தூர் மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 41KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பாளராக திரு.பி.நவநீதகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 28KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாநகராட்சியில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் 28.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் (ITMS) செயல்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 28.06.2022 அன்று நடைபெற்றது. (PDF 48KB)
மேலும் பல