Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் / மாணவியர் விடுதி விவர அட்டவனை வெளியீடு -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் /சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென அரசு மாணவர் / மாணவியர் விடுதி விவர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் / மாணவியர் இவ்விடுதிகளில் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 61KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைபெற விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைபெற விருப்பமுள்ள மாணவ மாணவியர் ‘www.skilltraining.tn.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனக் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 57KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) பயிற்சியாளர் சேர்க்கைக்கு ONLINE மூலம் விண்ணப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) 2022ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ONLINE மூலம் 24.06.2022 முதல் ‘www.skilltraining.tn.gov.in’ எனும் இணையதளத்தில் பெறப்பட்டு வருகிறது. ONLINE முறையில் பதிவேற்றம் செய்ய 20.07.2022 கடைசி நாளாகும் -பத்திரிகைச் செய்தி (PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு’ எனும் தலைப்பிலான வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி 2021-2022ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் 29.06.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 160KB)

மேலும் பல
FOREST DEPT RELIEF FUND

மாவட்ட ஆட்சித்தலைவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5இலட்சம் அரசு நிவாரண உதவிகொகைக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறுவாணி அடிவாரம் அருகில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் ரூ.5இலட்சம் அரசு நிவாரண உதவிகொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 28.06.2022 அன்று வழங்கி ஆறுதல் கூறினார்கள். (PDF 45KB)

மேலும் பல
SKILL DEVELOPMENT AND PLACEMENT SCHEME

திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டம் 2022-23 கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்துவதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2022

கோயம்புத்தூர் மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டம் 2022-23 கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்துவதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை 05.07.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது -பத்திரிகைச் செய்தி

மேலும் பல
GDP NEWS

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 27.06.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2020-21 ஆண்டில் சிறுசேமிப்புத்துறையில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்களையும், உலக சிக்கன நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை 27.06.2022 அன்று […]

மேலும் பல
RATION SHOP INSPECTION

நியாய விலைக்கடையினை உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலர் அவர்கள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2022

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லுர், பீளமேடு புதூர் சிந்தாமணி நியாய விலைக்கடையினை உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் 25.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 228KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் விதிகளை மீறுவோருக்கு ரூ.500/- அபராதமாக வசுலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 313KB)

மேலும் பல
Submission of Memorandum

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் & தொழில், நுகர்வோர் பாதுகாப்பு, உணவு & பொதுவிநியோகத்திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சரிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கடித நகலையும் மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான மான்ய நிலுவையையும் விரைந்து வழங்கவும் வேண்டுகோள் வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2022

கோயம்புத்தூரில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் & தொழில், நுகர்வோர் பாதுகாப்பு, உணவு & பொதுவிநியோகத்திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்களை சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நெல் கொள்முதலை தொடங்க கோரி அனுப்பிய கடித நகலையும் மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான மான்ய நிலுவையையும் விரைந்து வழங்கவும் 25.06.2022 அன்று வேண்டுகோள் வைத்தார். […]

மேலும் பல