தேசிய அளவில் “Eat Right Challenge” போட்டியில் வெற்றி பெற்றதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கிய சான்றிதழை கோவை மாவட்ட நியமன அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2022தேசிய அளவில் “Eat Right Challenge” போட்டியில் தேசிய அளவில் 12-வது இடமும், தமிழக அளவில் 4-வது இடத்தையும் கோயம்புத்தூர் மாவட்டம் பெற்றதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கோவை மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களை பாராட்டி வழங்கிய சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். (PDF 241KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாற்றுத்திறனுள்ள குழந்தைகளை பார்வையிட்டு நலன் விசாரித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2022கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் ஊனமுற்ற மற்றும் மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.06.2022 அன்று பார்வையிட்டு நலன் குறித்து விசாரித்தார்கள். (PDF 45KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2022கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 21.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 513KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் கால அட்டவணை வெளியிடு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2022தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி கோயம்புத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 590KB)
மேலும் பலதேசிய மக்கள் நீதிமன்றம் 26.06.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2022தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை நீதிமன்ற வளாகங்களிலும் 26.06.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 534KB)
மேலும் பலமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 20.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.06.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 200KB)
மேலும் பல2022 ஆம் ஆண்டிற்கான ‘கல்பனா சாவ்லா விருது’ பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/06/20222022 ஆம் ஆண்டிற்கான ‘கல்பனா சாவ்லா விருது’ பெற தகுதியான பெண்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் 30.06.2022-க்குள் விண்ணப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 99KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப்போரட்ட தியாகிகளின் நிரந்தர புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 சுதந்திரப்போரட்ட தியாகிகளின் நிரந்தர புகைப்பட கண்காட்சியை 20.06.2022 அன்று திறந்து வைத்தார்கள். (PDF 43KB)
மேலும் பலமாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் மலுமிச்சம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் மலுமிச்சம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் 19.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிய ஆவின் ஹை-டெக் மதிப்பு கூட்டு பொருட்கள் விற்பனை நிலையத்தினையும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் 19.06.2022 அன்று திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள், பால் வளத்துறை மேலாண் இயக்குனர் திரு. என்.சுப்பையன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல […]
மேலும் பலமாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடனுக்கான ஆணையினை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா வளாகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் ரூ.44.13 கோடி மதிப்பிலான கல்வி கடனுக்கான ஆணையினை மாணவ, மாணவியர்களுக்கு 18.06.2022 அன்று வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள், கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. எம்.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 68KB)
மேலும் பல