கோவை மாவட்ட உணவுப் பொருள் தயாரிப்பு தொழில் செய்து வரும் உணவு வணிகர்கள் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 30,2022 வரை கால நீட்டிப்பு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2022கோவை மாவட்ட உணவுப் பொருள் தயாரிப்பு தொழில் செய்து வரும் உணவு வணிகர்கள் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 30,2022 வரை கால நீட்டிப்பு FSSAI ஆல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருடாந்திர கணக்கு அறிக்கையினை www.foscos.fssai.gov.in என்ற இணையதள வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 68KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி வாகனத்திற்கான தணிக்கை நடைபெறுவதை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2022கோயம்புத்தூர் சீருடை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை போக்குவரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் 18.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 212KB)
மேலும் பலநகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா பெற்றுக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2022கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-O(15)-க்குட்பட்ட பிளாக் 1 முதல் 40 வரையிலான பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கோயம்புத்தூர் (வடக்கு) நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா பெற உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 844KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிள அளவைத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நிள அளவைத்துறையில் திருமதி.எஸ்.ஆனி இன்பன்ட் டீனா-விற்கு கருணை அடிப்படையில் 17.06.2022 அன்று பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.
மேலும் பலகோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2022கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.38.06 கோடி மதிப்பிட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் 17.06.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 55KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றபேரவை மனுக்கள் குழு அவினாசி சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை கட்டப்பட்டு வரும் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணியை தமிழ்நாடு சட்டமன்றபேரவை மனுக்கள் குழு தலைவர்/அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் அவர்கள் தலைமையில் மனுக்கள் குழு 16.06.2022 அன்று ஆய்வு மேற்கொண்டனர். (PDF 410KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது-2022க்கான தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது-2022க்கான தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களுக்கு 16.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 211KB)
மேலும் பலகட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் தொழிலாளர் நலன் -திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் ஆகியோர் 15.06.2022 அன்று வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 65KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பில்லூர்-III வது கூட்டுக் குடிநீர் திட்ட கட்டுமான பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2022கோயம்புத்தூர் மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின் நீர் ஆதாரமாக கொண்ட பில்லூர்-III வது கூட்டுக் குடிநீர் திட்ட மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முரகையன் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் 15.06.2022 அன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார்கள். இவ்வாய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். (PDF […]
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் 15.06.2022 அன்று நடைப்பெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் மாண்புமிகு தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15.06.2022 அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 241KB)
மேலும் பல