ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் 100% மானியத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு கறவை மாடு, 2 ஆண்டுகளுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்து மற்றும் உடனடி தீவனச் செலவிற்காக ரூ.3,000/- வழங்கப்படும்.

18 முதல் 60 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள மகளிர் மற்றும் திருநர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இணையதளம்: https://tnahschemes.tn.gov.in

27/11/2026 17/12/2026 பார்க்க (50 KB)