செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் விடுபட்ட ஆவணங்களை அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் விடுபட்ட ஆவணங்களை அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் | கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு மொத்தம் 686 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 16 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள 670 விண்ணப்பங்களில் 161 விண்ணப்பங்களில் சான்றிதழ்கள்/ஆவணங்கள் விடுபட்டுள்ளன. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், விடுபட்டுள்ள சான்றிதழ்கள்/ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை 03.10.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
30/09/2026 | 03/10/2026 | பார்க்க (521 KB) விண்ணப்பதாரர்கள் பட்டியல் (431 KB) |