வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள், 2 ஆண்டுகளுக்கான காப்பீடு, போக்குவரத்து மற்றும் தீவனச் செலவிற்காக ரூ.2,500/- மற்றும் ஓராண்டிற்குப் பிறகு ரூ.2,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. 18 முதல் 60 வயதிற்குட்பட்ட தகுதியுடைய ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள் மற்றும் குறிப்பிட்ட தகுதியுடைய மாற்றுத்திறனாளி மகளிர் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம்: https://tnahschemes.tn.gov.in

27/11/2026 17/12/2026 பார்க்க (52 KB)