Close

OBC, EBC மற்றும் DNT மாணவர்களுக்கு PM-YASASVI கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026

மத்திய அரசின் PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 மற்றும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்திற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2025–26ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்ற மாணவர்கள், 2026–27ஆம் கல்வியாண்டிற்கான புதுப்பித்தல் விண்ணப்பத்தை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் 15.09.2026 ஆகும்.

தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 409KB)