Close

PM-YASASVI முதுநிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் – 2026–27

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026

2026–27ஆம் கல்வியாண்டிற்கான PM-YASASVI முதுநிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வருமான வரம்பின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பாலிடெக்னிக், இளங்கலை தொழிற்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியின் Nodal Officer-ஐ அணுகி, UMIS இணையதளம் மூலம் 18.09.2026 முதல் 21.10.2026 வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 123KB)