Close

வால்பாறை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த செழிப்பாக உள்ளது. பொள்ளாச்யிலிருந்து வால்பாறைக்கு பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம்.

புகைப்பட தொகுப்பு

  • வால்பாறை மலைகள்
  • யானைகள் கூட்டம் வால்பாறை
  • வால்பாறை தேயிலை தோட்டம்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , ஆழியார் அணையிலிருந்து 102 கி.மீ தூரத்தில் உள்ளது.

தொடர்வண்டி வழியாக

அருகிலுள்ள இரயில் நிலையம் பொள்ளாச்சி ரயில் நிலையம் இது ஆழியார் அணைவிலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ளது . முக்கிய இரயில் நிலையம் கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பாகும். இது 102 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

சாலை வழியாக

மாநில அரசு பேருந்துகள் உள்ளன. பொள்ளாச்சியிலிருந்து 64 கி.மீ. தூரத்திலும், கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ. தொலைவிலும், அதிரம்பள்ளியில் இருந்து 60 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 600 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.