கோவை குற்றாலம்

வழிகாட்டுதல்
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

கோவை குற்றாலம் கோயம்புத்தூர் நகரத்திற்கு மேற்கே, மேற்கு தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த அருவித் தலமாகும். சிறுவாணி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் இந்த அருவி, பசுமையான வனப்பகுதி மற்றும் இயற்கைச் சூழலால் சூழப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் நீர்வீழ்ச்சியை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாக விளங்குகிறது. இப்பகுதி தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேரம்:   10.00 AM  மணி முதல்  2.00 PM  மணி வரை (திங்கட்கிழமை விடுமுறை)

நுழைவுக் கட்டணம்:  பெரியவர்கள் – ₹60/- ஒரு நபருக்கு & குழந்தைகள் – ₹25/- ஒரு நபருக்கு

தொடர்பு: +91 78260 70883

முகவரி: கோவை குற்றாலம், சிறுவாணி மலைத்தொடர், போலுவாம்பட்டி வனச்சரகம்,

கோயம்புத்தூர்.

அடைவது எப்படி:

வான் வழியாக

43.8 கி.மீ தொலைவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

தொடர்வண்டி வழியாக

30 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பு அமைந்துள்ளது.

சாலை வழியாக

32 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் பேருந்தது அமைந்துள்ளது.