மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் & தொழில், நுகர்வோர் பாதுகாப்பு, உணவு & பொதுவிநியோகத்திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சரிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கடித நகலையும் மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான மான்ய நிலுவையையும் விரைந்து வழங்கவும் வேண்டுகோள் வைத்தார்
கோயம்புத்தூரில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் & தொழில், நுகர்வோர் பாதுகாப்பு, உணவு & பொதுவிநியோகத்திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்களை சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நெல் கொள்முதலை தொடங்க கோரி அனுப்பிய கடித நகலையும் மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான மான்ய நிலுவையையும் விரைந்து வழங்கவும் 25.06.2022 அன்று வேண்டுகோள் வைத்தார். மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி, உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., கைத்தரி மற்றும் துணிநூல்த் துறை அரசு முதன்மை செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் இ.ஆ.ப. ஆகியோர் இந்நுகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.