மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 27.06.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2020-21 ஆண்டில் சிறுசேமிப்புத்துறையில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்களையும், உலக சிக்கன நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை 27.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 222KB)