Close

அன்னூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு கைகள் மற்றும் இரு கால்களை இழந்த வாலிபாருக்கு நவீன எடைகுறைந்த கைகள் மற்றும் கால்கள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2022
Diffrently ABled Person - Treatment News

கோயம்புத்துர் மாவட்டம், அன்னூர் வட்டம், குமரன் குன்று வேப்பம்பள்ளம் பகுதியினை சேர்ந்த 22 வயதான வாலிபர் சுபாஷ். இவர் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட மின்சார விபத்தால் 05.02.2022 அன்று இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும் இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார்.இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்களிடம் உதவி வேண்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார். அதனடிப்படையில் ரூ.250 இலட்சம் மதிப்பில் நவீன எடைகுறைந்த கைகள் மற்றும் கால்கள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுபாஷ் அவர்கள் 21.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்களை நேரில் சந்தித்து தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை கால்களை காண்பித்தும், செயற்கை கைகளால் கைகுழுக்கியும் நன்றி தெரிவித்தார்.
(PDF 39KB)