Close

6வது கோயம்புத்தூர் புத்தக திருவிழாவினை மாண்புமிகு அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்து, இளம்படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2022
BOOK FESTIVAL STARTING NEWS

கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் 22.07.2022 அன்று மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 6வது ஆண்டாக நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தக திருவிழாவை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி,கல்பனா ஆனந்த்குமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப். இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், கொடிசியா தலைவர் வி.திருஞானம், புத்தக திருவிழா சேர்மன் பி.விஜய்ஆனந்த், மாநில வரி கூடுதல் இயக்குநர் ஏபி.தேவந்திரபூபதி, பத்மஸ்ரீ திரு.சிற்பி பாலசுப்பிரமணியன், செயலாளர் ஆர்.சசிகுமார், கொடிசியா துணைத்தலைவர் ரமேஷ், விஜயா பதிப்பக மேலாண் இயக்குநர் வேலாயுதம், மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 502KB)

BOOK FESTIVAL STARTING NEWS

BOOK FESTIVAL STARTING NEWS

BOOK FESTIVAL STARTING NEWS