• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2022

75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இவ்விழாவினை கொண்டாடும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி. பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் 13.08.2022 முதல் 15.08.2022 வரை தேசியக்கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (PDF 107KB)