கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2022

கோயம்புத்தூர் மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டுவரும் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆவின் பொருட்கள் உற்பத்தி பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து 26.10.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி பொதுமேலாளர்கள் அருண்குமார்(பொறியியல்), அந்தோனி (தரக்கட்டுப்பாடு), சிவசங்கரி(கணக்கு), கோகுல்கார்த்திக்(நிர்வாகம்), டாக்டர்.தனபாலன்(பால்உற்பத்தி மற்றும் உள்ளீடு), துணை பதிவாளர்(பால்வளம்) புவனேஸ்வரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சுதர்சன் உதவிப்பொறியாளர் மணி விஸ்வநாதன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 40KB)