மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 27.10.2022 அன்று மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மேற்கு மண்டல காவல் துறை தலைவர் முனைவர்.சுதாகர் இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப. மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.