• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஆகியோரால் சாலைப் பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 30/11/2022
Road safty meeting

மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு .எ.வ. வேலு மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி ஆகியோரால் சாலைப் பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் 30-11-2022 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்த்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாரயணன் இ.கா.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிசெல்வன், மாநகர காவல் துணை ஆணையர் திரு.தே.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் பூமா, பண்டரிநாதன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தலைமை பொறியாளர்கள் இரா.இளஞ்செழியன், (பொதுப்பணித்துறை கட்டிடம்) தலைமைப்பொறியாளர் என்.பாலமுருகன் (தேசிய நெடுஞ்சாலை), மா.முருகேசன் (நெடுஞ்சாலை), கண்காணிப்பு பொறியாளர் சத்தியவாகீஸ்வரன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.(PDF 81KB)