மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2022
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம், தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தினை 12.12.2022 அன்று மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர், திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மத்திய மண்டலக்குழு தலைவர் மீனாலோகு, உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, தமிழ்நாடு ஹோட்டல் மண்டல மேலாளர் வெங்கடேசன், மேலாளர் பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 49KB)