• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/12/2022

கோயம்புத்தூர் மாவட்டம்,கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் 17.12.2022 அன்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, மாவட்ட கல்விஅலுவலர்கள் பாண்டியராஜசேகரன்(இடைநிலை), புனிதா(தொடக்கநிலை), வள்ளியம்மாள் (பொள்ளாச்சி), கீதா(தனியார் பள்ளிகள்) கிக்கானி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 45KB)