கோயம்புத்தூரில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பிரசித்திப் பெற்ற உணவு வகைகளை அந்தந்த மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து விற்பனை செய்திடும்வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் 04.03.2026 முதல் 08.03.2026 ஆம் தேதி வரை வ.உ.சி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. உணவுத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவு வகைகள், தனித்துவமான அசைவ உணவு வகைகள் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. (PDF 238KB)