Close

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026

தமிழ்நாட்டில் 2026-27 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) Kharif பருவத்திற்கான அறிவிக்கை பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அக்கிரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட். காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரீப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட (நெல் I, மக்காச்சோளம் I, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளுப்பயறு) பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. (PDF 71KB)