Close

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 08/08/2026

உலக மக்களின் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் 1% பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் வருடம் இருமுறை நாடு தழுவிய குடற்புழு நீக்கும் திட்டம் 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குடற்புழு நீக்க முகாம் 10.08.2026 அன்று கோவை மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லூரிகள், 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 530 துணை சுகாதார நிலையங்களின் மூலம் அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 17.08.2026 அன்று வழங்கப்படும்.

(PDF 158KB)