Close

திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாவில் ஆர்வமுள்ள  பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, (Transgender) திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியுடைய திருநங்கைகள் இப்பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை திருநங்கைகளிடையே ஏற்படுத்தி, தகுதியும் ஆர்வமும் உள்ள திருநங்கைகளின் பெயர் விவரங்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பான **மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி.ஜெகதீஸ்வரி அவர்களை 8939896380 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ** என மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 55KB)