Close

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்

வழிகாட்டுதல்
வகை வரலாற்று சிறப்புமிக்கது

கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு, சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பயணத்தைப் பாதுகாத்து மக்களிடம் எடுத்துரைக்கும் தனித்துவமான அருங்காட்சியகமாகும். இங்கு காவல்துறை சீருடைகள், ஆயுதங்கள், விசாரணைக் கருவிகள், வரலாற்றுப் பதிவுகள் மற்றும் வீரப்பனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய நினைவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட காலனித்துவக் கால கட்டிடத்தில் அமைந்துள்ள இவ்வருங்காட்சியகத்தில், காவல் பணியின் வரலாறு, தடய அறிவியல் (Forensic Science), குற்றப் புலனாய்வு முறைகள் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நுட்பங்கள் தொடர்பான சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அருங்காட்சியக வளாகத்தில் டி-55 போர் டேங்க், ஏவுகணைகள் மற்றும் சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அரிய காட்சிப் பொருட்களும் பார்வையாளர்களை கவர்கின்றன.காவல்துறையின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கவும், வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாக்கவும் இவ்வருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுகிறது.

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை

விடுமுறை நாள்: திங்கட்கிழமை

நுழைவுக் கட்டணம் :

  • அரசு பள்ளி மாணவர்கள் – இலவசம்
  • தனியார் பள்ளி மாணவர்கள் – ₹5
  • பெரியவர்கள் – ₹10

தொடர்பு : 94981 72558

முகவரி : ஸ்டேட் பாங்க் சாலை, இரயில் நிலையம் எதிரில் கோபாலபுரம்,

கோயம்புத்தூர் – 641018

அடைவது எப்படி

வான் வழியாக

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் → காவல் அருங்காட்சியகம் -12 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

கோயம்புத்தூர் ரயில் நிலையம் → காவல் அருங்காட்சியகம் - 50 மீ.

சாலை வழியாக

காந்திபுரம் → காவல் அருங்காட்சியகம் - 4 கி.மீ.