மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: கோவை மாவட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரம்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) பணிகள் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்களால் வீடுகளுக்கு நேரில் சென்று, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது வீடுகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான சரியான தகவல்களை எவ்வித தயக்கமும் இன்றி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கணக்கெடுப்புப் பணிகளில் ஏதேனும் வீடுகள் அல்லது பகுதிகள் விடுபட்டிருந்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி/நகராட்சி அலுவலகங்கள் அல்லது பேரூராட்சி அலுவலகங்களை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
முதன்மை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் கீழ் அனைத்து தகுதியான குடும்பங்களும் கணக்கெடுப்பில் இடம்பெறுவதை உறுதி செய்ய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.