கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே மற்றும் சிலம்பம் தற்காப்புக் கலைகளில் அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கராத்தே பயிற்சி 3 மாதங்களில் 36 வகுப்புகளும், சிலம்பம் பயிற்சி 2 மாதங்களில் 24 வகுப்புகளும் வழங்கப்பட வேண்டும். தகுதியான கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை 15.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.