Close

OBC, EBC மற்றும் DNT மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
2026–27ஆம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள Top Class Schools பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும், OBC, EBC மற்றும் DNT பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான தமிழக மாணவ, மாணவியர்கள் PM YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ், 9–10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 மற்றும் 11–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்திற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், 30% இடஒதுக்கீடு மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுப்பித்தல் (Renewal): 2025–26ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 30.09.2026க்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களின் சரிபார்ப்புக்கான கடைசி நாள் 15.10.2026.

புதிய விண்ணப்பம் (Fresh): 2026–27ஆம் ஆண்டில் 9 மற்றும் 11ஆம் வகுப்பில் புதிதாக சேரும் தகுதியான மாணவர்களுக்கான விண்ணப்ப தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தகுதியான மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 115KB)