மானியத்துடன் வீட்டு மற்றும் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகள் மற்றும் பழச்செடிகளை வளர்க்க ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மாடித்தோட்டம், நிழல்வலைக் குடில், நீரியல் தோட்டம் மற்றும் செங்குத்துத் தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், காய்கறி விதைகள், பழச்செடிகள் மற்றும் கீரை வளர்ப்புத் தொகுப்புகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இத்திட்டங்கள் மூலம் குடும்பத்திற்குத் தேவையான சத்தான காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம்.
பொதுமக்கள் தங்கள் வட்டாரத் தோட்டக்கலை அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.