மாடுகளுக்கு உண்ணிக்காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடனடியாக கால்நடை மருத்துவச் சிகிச்சை பெறவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

உண்ணிக்காய்ச்சல் (Tick Fever) என்பது உண்ணிகள் மூலம் மாடுகளுக்குப் பரவும் தொற்று நோயாகும். இந்நோயால் அதிக காய்ச்சல், தீவனம் உட்கொள்ளுதல் குறைதல், பால் உற்பத்தி குறைதல், சோர்வு மற்றும் சிவப்பு அல்லது காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதனைத் தடுக்க மாடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகைகளைத் தூய்மையாகப் பராமரித்தல், உண்ணி ஒழிப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுதல் அவசியம். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

(PDF 172KB)