மாவட்டம் பற்றி
கோயம்புத்தூர் நகரம், தமிழ் நாடு மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள் , சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தற்பொழுதும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மேலும் வாசிக்க