இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
கோயம்புத்தூர் மாவட்டம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 31.01.2023 அன்று இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டத்தில் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்து, இ.எஸ்.ஐ மருத்துவமனை கல்லூரி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை அணிவித்து, தமிழ்மன்றத்தை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குநர், மரு.ஆர்.சாந்திமலர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை மரு.எம்.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.டி.ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 60KB)