உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/11/2022
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலப்பணிகள் அலுவலகத்தில் உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை(ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை – நவீன வாசக்டமி இரு வார விழா) முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தை 22.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, குடும்பநல துணை இயக்குநர் மரு.கௌரி, நகர் நல அலுவலர் பிரதீப் மற்றும் வட்டார சுகாதாரப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். (PDF 23KB)